திருப்பூர்,ஆக.10: திருப்பூர் அருகே சுடுகாட்டில் மரங்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது. திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த சுடுகாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழமை வாய்ந்த மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் பெருமாநல்லூர் அடுத்த பொங்குபாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி (53), என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பொங்குபாளையத்தில் தவெக நிர்வாகி தண்டபாணி என்பவர் அரசு அதிகாரியின் அனுமதி இல்லாமல் சுடுகாட்டில் 50 ஆண்டு பழமையான வேப்ப மரத்தை வெட்டி விற்பனை செய்துள்ளார். எனவே, வேப்ப மரத்தை திருட்டுத்தனமாக வெட்டி விற்பனை செய்த தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
+
Advertisement




