Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

திருப்பூர், ஆக. 10: திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெள்ளியங்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவருடைய உடமைகளை பரிசோதித்த போது அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40), என்பது அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.