தாராபுரம்,ஆக.10: தாராபுரம் அரசு மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் அனைத்தும் பூங்கா சாலையில் அமைந்துள்ளது. 1939ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ராஜன் என்பவரால் திறந்து வைக்கப்பட்ட இந்த நகராட்சி பூங்கா பெயரளவில் மட்டுமே பூங்கா என்ற பெயரை தாங்கி உள்ளது.
ஒரு காலத்தில் பூங்காவில் பறவைகள், முயல், கிளி, குரங்கு என குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் சின்னஞ்சிறு அழகிய விலங்கினங்கள், உற்சாகமாக விளையாட ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் இருந்தது. மாலை நேரம் நெருங்கி விட்டால் மகிழ்ச்சியுடன் துள்ளாட்டம் போட்டு பூங்காவுக்கு ஓடி வந்த காலம் மாறி, பூங்காவின் தோற்றமும் நாளுக்கு நாள் தேய்ந்து தற்போது அடையாளம் தெரியாத நிலையாக மாறியது.



