Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

செல்போன் திருடிய வாலிபருக்கு 7 மாதம் சிறை

திருப்பூர், ஜூலை 9: திருப்பூர் குமார் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (30). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம் (55) என்பவர், சசிகுமாரின் சட்டைப்பையில் இருந்து செல்போனை திருடினார். இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.