Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 130 பேர் கைது

திருப்பூர்,செப்.8: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.

இதில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும், உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 130 மாற்றுத்திறனாளிகளை தெற்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை அவர்களை விடுத்தனர்.