Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாநகர போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்ஆக.8: திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில் கேஎஸ்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதனை கேவிஆர் நகர் சரக பொறுப்பு உதவி கமிஷனர் ராஜா சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கேஎஸ்சி பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் கே.எஸ்.சி பள்ளியை வந்து அடைந்தது. இந்தப் பேரணியில் போதை பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.இன்ஸ்பெக்டர்கள் கணேஷ் குமார், தெய்வமணி,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.