உடுமலை, ஆக. 8: உடுமலை அரசு கலைக் கல்லூரி, தனியார் தொண்டு நிறுவனம் ஆதரவுடன் லியோ கிளப்பின் சார்டர் நிறுவல் விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செல்வராஜ், இளைஞர்களின் ஆற்றலை சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம், தலைமைத்துவப் பண்புகள் குறித்து உரையாற்றினார். லியோ கிளப்பின் சார்டர் நிறுவல் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வை நித்யானந்தம் முன்னிலை வகித்து நடத்தினார்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்று, லியோ கிளப்பின் கொள்கைகள் மற்றும் சேவை இலக்குகளை நிறைவேற்ற உறுதிமொழி ஏற்றனர். விழாவில் நந்தகோபால், பாஸ்கர், கருணாநிதி, ரஞ்சீத், ரவிசங்கர் உள்ளிட்ட தொண்டு நிறுவனம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.இந்த நிகழ்வில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். முடிவில் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் குமரவடிவேல் ஆசிரியர் நன்றி கூறினார்.



