Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்திய கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

உடுமலை, ஆக. 8: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பயணம்- மக்கள் சந்திப்பு இயக்கம் நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ந்து விலைவாசி உயர்வை ஒன்றிய அரசே கட்டுப்படுத்து, விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்திடு சட்டபூர்வமான நடவடிக்கை எடு, 44 தொழிலாளர் சட்ட உரிமைகளை நான்கு சட்ட தொகுப்பாக மாற்றி தொழிலாளர் உரிமையை பறிக்காதே, படித்த இளைஞர்களுக்கு உகந்த வேலை வாய்ப்பை உருவாக்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய கமிட்டி செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் கொண்டம்பட்டி ஊராட்சி சனுப்பட்டி கிராமத்தில் பிரசாரம் நடந்தது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.