Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூத்து அமைச்சர்களின் வருகைக்காக 1.30 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்

திருப்பூர், ஜூன் 8: திருப்பூரில் விடுமுறை நாளில் நடந்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் 1.30 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தனா். இதுபோல் இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகளும் பங்கேற்றத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் மனிஷ் தலைமையில் நடைபெற்றது. வழக்கமாக வார நாட்களில் நடைபெறும் இந்த கூட்டம் முதல் முறையாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதற்காக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர். காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவசர அவசரமாக கலெக்டா் அலுவலகத்திற்கு வந்து கூட்ட அரங்கில் காத்திருந்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கமலி ஆகியோர் 10.15 மணிக்கு வந்து கூட்ட அரங்கிற்கு வந்தனர். அமைச்சர் அருண்ராஜ் 11.30 மணிக்கு தான் கூட்ட அரங்கிற்கு வந்தார். அதுவரை ஆய்வு கூட்டம் நடைபெறவில்லை.

அதிகாரிகள் அனைவரும் உள்ளே அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர். விடுமுறை நாளில் கூட்டம் நடந்ததே பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்னும் அவா்களை எரிச்சலுட்டம் வகையில் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அரசு அதிகாரிகள் மட்டுமே பங்குபெறும் கூட்டத்தில் தவெக நிர்வாகியான அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா மற்றும் மாவட்ட செயலாளர்கள் என தவெகவினர் அரசு அதிகாரிகளுக்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

இதன் காரணமாக அரசு அதிகாரிகள் பலரும் இருக்கைகள் இன்றி ஆங்காங்கே நின்றபடி கூட்டத்தில் பங்கேற்றனர். இது அரசு துறை சார்ந்த கூட்டமாக இல்லாமல் தவெக கூட்டமாக இருந்தது என அரசு அதிகாரிகள் புலம்பினர். கடந்த காலங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால், தற்போது இதுபோன்று சம்பவங்கள் நடந்து வருவது வருத்தமளிக்கிறது என தெரிவித்தனர். இதற்கிடையே அமைச்சர்களை சந்தித்து தங்களது பகுதியில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் கூட்ட அரங்கு வெளியே காத்திருந்தனர். அமைச்சர் வர கால தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.