Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெரிசலை குறைக்க பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர், செப். 7: திருப்பூர் மாநகர போலீசார் தற்போது விபத்துகளை குறைப்பதிலும், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக பல்லடம் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் வழக்கமான போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்து வருகின்றனர். திருப்பூரின் மிக முக்கியமான ரோடுகளில் பல்லடம் ரோடு ஒன்றாகும். பல்லடம் ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்லடம் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் உழவர் சந்தைக்கு பின்புறம் உள்ள வெங்காயம் மண்டி வரும் கனரக வாகனங்களும், உழவர் சந்தைக்கு காய்கறிகள் இறக்க வரும் வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்து யூ டர்ன் செய்வதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3 இடங்களில் யூ டர்ன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் இருந்து பல்லடம் ரோடு செல்லும் வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் வராமல் அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட யூ டர்னில் திரும்பி மீண்டும் பல்லடம் ரோட்டில் செல்லலாம்.

இந்த நடைமுறையை தற்போது போலீசார் சோதனைப்படுத்தி வருகின்றனர். இந்த சோதனையால் பல்லடம் ரோடு பகுதியில் பெருவாரியான போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.