Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர், ஆக. 7: திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற பூனை மணி (29) சாமுண்டிபுரத்தை சேர்ந்த சகாதேவன் (35) ஆகிய 2 பேர் மீதும் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் இருவரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பிருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரிக்கு திருப்பூர் போலீசார் பரிந்துரை செய்தனர். அதை ஏற்று கமிஷனர் ராஜேஸ்வரி அவர்களை குண்டர் சட்டத்திலும் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள மணிகண்டன், சகாதேவன் ஆகியோரிடம் போலீசார் நேற்று வழங்கினார்கள்.