Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லடத்தில் மின் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் கட்ட நிர்பந்தம்

பல்லடம், செப். 5: பல்லடத்தில், விசைத்தறி, சைசிங், நுாற்பாலைகள், கறிக்கோழி பண்ணைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட தொழில்கள் நடந்து வருகின்றன. மின் கட்டண உயர்வு, இதர கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் தொழில் துறையினர் ஏற்கனவே சிரமத்தில் உள்ளனர். இதற்கிடையே, மின் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மின் வாரியம் உயர்த்தியுள்ளது. ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது: அனைத்து தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே ஒன்றரை மாத டெபாசிட் தொகையை மின் வாரியத்துக்கு செலுத்தியுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில், மீண்டும், கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது.தற்போது, 2 மடங்கு கூடுதலாக டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் கூறியுள்ளது. மின் கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை எனில், ஓரிரு நாட்களுக்குள் இணைப்பு துண்டிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஓராண்டுக்கான சராசரி டெபாசிட் தொகை இருந்தாலே போதுமானது.

ஆனால், தற்போது, இரண்டு மடங்கு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், குறு சிறு தொழில் நிறுவனங்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றன. மின் கட்டணம் உயர்த்தப்படாது என, தமிழக அரசு அறிவித்தது ஆறுதல் அளித்த நிலையில், கூடுதல் டெபாசிட் தொகை செலுத்த வற்புறுத்துவது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி கூறுகையில், ‘வழக்கமான டெபாசிட் நடைமுறைப்படி தான் தற்போதும் தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது’ என்றார்.