Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திமுக-கொமதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், ஆக. 4: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று தி.மு.க. அலுவலகத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ் மற்றும் மகளிரணி நிர்வாகி கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.