Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நியமனம்

திருப்பூர், ஜூன் 4: இந்திய அரசின் மிக முக்கிய வர்த்தக ஆலோசனைக்குழுவான வர்த்தக வாரியத்தின் உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வர்த்தக மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் இந்த வர்த்தக வாரியம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 முக்கிய பிரமுகர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.திருப்பூரின் பின்னலாடை துறையின் முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருப்பூர்

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவருமான ஏ.சக்திவேல் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இத்தகைய உயர்மட்ட வர்த்தக ஆலோசனைக்குழுவில் கே.எம்.சுப்பிரமணியன் இணைந்துள்ளதன் மூலம், தேசிய அளவிலான வர்த்தக கொள்கை முடிவுகள் மற்றும் ஆலோசனைகளில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் குரல் இனி மேலும் வலுவாக ஒலிக்கும் என்றும், தொழில்துறையினரின் நலன்கள் மேம்படும் என்றும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.