Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் புதிய திட்ட பணிகள் துவக்கம்

தாராபுரம், மார்ச் 3: தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.34 லட்சத்தில் புதிய திட்ட பணிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தாளக்கரை ராமன்காடு பேருந்து நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.
மேலும், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி புதுப்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. மேலும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் முத்தூர்- மூலனூர் சாலை முதல் புதுப்பை கஸ்தூரிபாளையம் வரையிலான தார் சாலையை பலப்படுத்தும் பணியையும் துவக்கி வைத்தார்
தொடர்ந்து நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளிலும் ரூ.34 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில், குண்டடம் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், சந்திரசேகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.