திருப்பூர், அக். 2: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தடையை மீறி செயல்படும் கடைகள் மீது பொது சுகாதார மற்றும் மாநகராட்சி சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


