Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓட்டுநரை தாக்கிய 3 பேர் கைது

திருப்பூர், அக். 2: கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். கோவையில் பதுங்கி இருந்த ஆகாஷ் மற்றும் அந்த இளம்பெண்ணை திருப்பூர், சாமுண்டிபுரத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து இளம்பெண்ணின் உறவினர்களான ஆறுமுகம் (44), அவருடைய மகன் சுபாஷ் (19) விஜயகுமார் (36) ஆகியோர் சேர்ந்து ஆகாஷை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த ஆகாஷை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகம், சுபாஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.