Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண மண்டபத்தில் சூதாடிய 4 பேர் கைது

திருப்பூர், ஆக.1: திருப்பூர் முத்தனம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிலர் சூதாடுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று சூதாடியவர்களை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இதே பகுதியை சேர்ந்த செந்தில் (45), முனியப்பன் (47), பன்னீர் (45), வெங்கடேஷ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.97 ஆயிரம் பணம் மற்றும் 2 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.