Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு

உடுமலை, ஜூலை 1: உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் சத்தியவாணி மற்றும் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் சத்தியவாணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்குரிய சட்ட உரிமைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள் குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, சுயநம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், சமூக அக்கறையுடன் மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் சமூக நலத்துறை பணியாளர் சுபா மைதிலி மற்றும் சமூக ஆர்வலர் நவீன் பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.