Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பாளை. ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கேடிசி நகர், ஏப். 30: பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமளிப்பு விழா நடந்தது. தலைமை வகித்த நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி. பர்னபாஸ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். முன்னிலை வகித்த கல்லூரித் தாளாளர் மோகன் ராஜ்குமார், விழாவைத் துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அனிதா ரூத் வரவேற்றார். இதில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வருமான ஷீலா ஸ்டீபன், மாணவ- மாணவிகளுக்கு பி.எட். பட்டங்கள் வழங்கினார். அத்துடன் முதலிடம் வென்ற கணிதத்துறை மாணவி மீனாவுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். தொடர்ந்து அவர் விழா பேருரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘ஆசிரியர் பணி என்பது அனைத்து பணிகளிலும் உயரியது. ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஆசிரியர் சிறந்த பண்புகளை உடையவராக இருக்க வேண்டும். குறிப்பாக சிறந்த நடத்தை உடையவராகவும் கொள்கையில் உறுதி கொண்டவராக, மாணவர்களிடம் சிறந்த தகவல்களை வழங்குபவராக நம்பிக்கை உடையவராக, பாராட்டும் திறன் உடையவராக இருக்க வேண்டும்’’என்றார். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நிர்வாகச் செயலாளர் கிறிஸ்டோபர் செல்வராஜ், பொருளாதார நிர்வாகி அனிஸ் ஆசீர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஆனந்தபாபு ஒருங்கிணைத்து வழங்கினார். விழாவில் மாணவ- மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.