Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை வர்த்தக மையத்தில் யுனைடெட் விவசாய, கட்டுமான கண்காட்சி துவங்கியது

மதுரை, பிப்.28: நெல்லை வர்த்தக மையத்தில் யுனைடெட் பாஸ்ட் நிறுவனத்தின் சார்பில் நடக்கும் மாபெரும் விவசாயம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை நெல்லை மாவட்ட விவசாய துறை இணை இயக்குநர் பூவனன் மற்றும் கண்காட்சியின் இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். கண்காட்சிகளில் விவசாயத்திற்கு தேவையான அனைத்து விதமான கருவிகள் உபகரணங்கள் விவசாயிகள் வேலைப்படுவதற்கு வைக்கக்கூடிய நவீன கருவிகள், சொட்டு நீர் பாசனங்கள், உரங்கள் விதைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், கட்டுமான கண்காட்சியில் வீடு கட்ட தேவையான அனைத்து பொருட்களும், வீட்டு மனைகளும், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் என அனைத்து விதமான ஷாப்பிங் பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் சுமார் 250 நிறுவனங்களுக்கும் மேல் கலந்து கொண்டுள்ளன. இக்கண்காட்சி நாளை (மார்ச் 1) இரவு 7 மணி வரை நடைபெறும் என நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலசவம். ஆகையால் அனைத்து பொதுமக்களும் விவசாயிகளும் கண்காட்சியை கண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.