தென்காசி, ஆக.20: தென்காசி 13வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியை கௌசல்யா வரவேற்றார். தலைமை ஆசிரியர் (பொ) வின்சென்ட் பேசும்போது 2020ம் ஆண்டு காளிதாஸ், 2025ம் ஆண்டு ஹர்சன் இந்த ஆண்டு ஸ்ரீமதி வெற்றி பெற்றுள்ளார். அவரைப் போல மற்ற மாணவர்கள் வெற்றிப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாணவி ஸ்ரீமதிக்கு ஆசிரியர்கள் சார்பாக ஸ்டெதஸ்கோப் பரிசாக வழங்கப்பட்டது. மாணவியின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் ஆசிரியர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜபருல்லாகான் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, விமலா, புன்னகை சுகி, உதவியாளர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.


