தென்காசி,ஆக.20: தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் வெளியிட்ட செய்திகுறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026ம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in


