மானூர், ஆக. 20: மானூர் பஜாரில் நிறுத்தி இருந்த மொபட் மாயமானது. மானூர் அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் (63). இவர் மானூர் பஜாரில் உள்ள சாலையோர டிபன் சென்டரில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் குறிச்சிகுளத்திலிருந்து அவர் தனது மொபட்டில் மானூர் வந்தார்.
அங்கு டிபன் சென்டர் முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் நிஜாமுதீன் மொபட்டை எடுக்கச் சென்றார். அப்போது மொபட் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


