Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி தருவேன் தென்காசி எம்எல்ஏ கலைகதிரவன் உறுதி

தென்காசி,மே 18: தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் கலை கதிரவன் எம்எல்ஏ நேற்று காலை தென்காசி கிழக்கு ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சி திருநகர், அழகப்பபுரம், அய்யாபுரம், வேதம்புதூர் இலஞ்சி, காசிமேஜர்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘வாக்காளர்களாகிய நீங்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிறைவேற்றி கொடுத்து விட்டீர்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றி தரப்படும். சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றி தருவேன் என்று உத்தரவாதம் அளிக்கின்றேன்.

அனைத்து கிராமங்களுக்கும் சுழற்சி முறையில் மீண்டும் வந்து கோரிக்கைகளை கேட்பேன்’ என்றார் முன்னதாக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு இணை செயலாளர் அன்பகம் கலை, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை,

மாவட்ட வர்த்தக அணி முத்துக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன், அறங்காவலர் சுந்தர்ராஜ், சேர்மராஜ், கோமதிநாயகம், சுப்பையா, கோமதி நாயக்க தேவர், பாலசுப்பிரமணியன், வலசை குட்டி, ராஜேந்திரன், வேலுச்சாமி, சுகுமார், செல்லத்துரை, பாலா, ஹரிஹர பாண்டியன், வேம்பு, பண்டாரம், கணேசன், பழனிச்சாமி, சுப்பிரமணி, மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.