களக்காட்டில் அட்டகாசம் செய்த குரங்கு கூண்டில் சிக்கியது
களக்காடு, நவ. 12:களக்காடு அருகே உள்ள அம்பேத்கர் நகர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வயது முதிர்ந்த ஆண் குரங்கு அட்டகாசம் செய்து வந்தது. இதுகுறித்து களக்காடு வனத்துறையில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் அட்டகாசம் செய்து வந்த குரங்கை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. நேற்று குரங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய குரங்கிற்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement