தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை கட்டுமான பணி
தென்காசி,ஆக.12: தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்கும் அறை கட்டுமான பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பொன்னி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் மாடசாமி வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.
விழாவில் தலைமை அர்ச்சகர் செந்தில் பட்டர், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பெருமாள், கதிரவன், மாவட்ட பிரதிநிதி முருகன், கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி, தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி, நகர பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சந்தோஷ், மாரிமுத்து, பிரேம்குமார், அந்தோணி, பிரபாகரன், பெரியசாமி, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.