புளியங்குடி மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் ஆலிமா பட்டமளிப்பு விழா
புளியங்குடி, ஆக. 12: புளியங்குடியில் அத் தக்வா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆலிமா-முபல்லிஹா பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகியும், அத் தக்வா பள்ளிவாசல் தலைவருமான செய்யது அலி தலைமை வகித்தார். நெல்லை ஏபிசிடி ரியல் எஸ்டேட் புரோமோட்டர்ஸ் பி. லிட் நிறுவனர் மௌலானா, சமூக ஆர்வலர் ஜெம் ஜின்னா, மேலப்பாளையம் தொழிலதிபர் காஜாப்பா, ஏர்வாடி அசன் மீராசாகிப், தென்காசி மைதீன் டிம்பர் குரூப் இயக்குநர் செய்யது அலி பாதுஷா, கடையநல்லூர் முபாரக், அமெரிக்கா பொறியாளர் இம்ரான், வழக்கறிஞர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாகி பொறியாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்றார். அத் தக்வா பள்ளிவாசல் இமாம் மௌலவி அப்துல்லாஹ் உமரி திருமறை வசனம் ஓதினார். கல்லூரி கவுரவ ஆலோசகர் மௌலவி அப்துர் ரஸ்ஸாக் பிர்தவ்ஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஜாக் அமைப்பின் அழைப்பாளர் மௌலவி அன்சார் ஹூசைன் பிர்தவ்ஸி, இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி இக்பால் பிர்தவ்ஸி ஆகியோர் ஆலிமா பட்டம் பெறும் மாணவிகளுக்கு ஸனது வழங்கி வாழ்த்தி பேசினர். நெல்லை அல்புர்கான் ஷரியத் கல்வியகத்தின் நிறுவனர் மௌலவி மீரான் நூரி, நெல்லை எஸ்எம் நகர் இயக்குனர் பொறியாளர் சேக் முகமது, அத் தக்வா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியைகள் ஆலிமாக்கள் மும்தாஜ், சலீம் சலீனா சித்தீக்கிய்யா, அம்ரின் தொய்பா, ஜன்னத்துல் பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்துல் சத்தார், சிங்கப்பூர் ரிசவு முஹம்மது, செய்யது அலி, மன்சூர் அலிகான், தக்வா ஆர் பாதுஷா, அப்துல் ஜப்பார், அப்பாஸ் பாய், அப்துல் ரஹீம் சாகுல் ஹமீது, முஹம்மது அசார், முஹம்மது தவ்பீக் அப்துல் ஹமீது, முஹம்மது அப்துல்லா முஹம்மது சுகைல், ஜலால் தீன், அஸ்லம், முஜாஹித் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லூரியின் மேலாளர் யாசர் அராபத் நன்றி கூறினார்.