விகேபுரம்,டிச.10: விகேபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மூலம் மாதந்தோறும் மரக்கன்றுகள் வழங்கி வருகிறார். மாணவர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை பட்டியலிட்டு தங்களது வகுப்பு ஆசிரியர் ஆபேல் சேத்துடன் இணைந்து அவர்கள் இல்லங்களுக்கே சென்று மாதந்தோறும் வழங்கி பசுமை புரட்சி செய்து வருகிறார். அதன்படி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி இல்லங்கள் தோறும் மஞ்சப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


