நெல்லை, டிச.10: நெல்லையில் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையின் காரணமாக உளுந்து பயிர்கள் அழிந்ததால் அதற்குரிய நிவாரண தொகையை அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைதது விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆபிரகாம் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் சுற்று வட்டார பகுதிகளில் குறிப்பாக கானார்பட்டி, இரண்டு சொல்லான், இலந்தைகுளம் மற்றும் பல பகுதிகளில் உளுந்து பயிர் பருவம் தவறிய மழையில் உளுந்து விதைக்கப்பட்டு மேற்படி பயிர்கள் பூ பிடிக்கும் தருணத்தில் தொடர்ச்சியான மழையின் காரணமாக உளுந்து பயிர்கள் வீணாகியது. இதற்கு உரிய நிவாரண தொகையை அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


