Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கடையம் அருகே நாவல் மரத்தில் திடீர் தீ விபத்து

கடையம்,மே 5: தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் வெள்ளிகுளம் என்ற கிராமத்தின் சாலையின் இரு புறமும் நாவல் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சாலையோரம் இருந்த நாவல் மரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஆலங்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன், சிறப்பு நிலைய அலுவலர் விஸ்வநாதன் மற்றும் வீரர்கள் ராஜேந்திரன், செல்வ ராஜா மரத்தில் ஆகியோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் காற்றின் வேகத்தால் தீ பரவியது. தொடர்ந்து தீப்பிடித்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.