Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பாபநாச சுவாமி கோயிலில் பொதுவிருந்து

விகேபுரம்,பிப்.5: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் (பொ) வெங்கடேசன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் கோமதி முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் கலந்து கொண்டு பொது விருந்தை தொடங்கி வைத்தார்.நிகழ்வில் உதவியாளர் செந்தில் கிருஷ்ணன் கவுன்சிலர்கள் விக்னேஷ் நியமன உறுப்பினர் பிச்சுமணி, திமுக சுரேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.