Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொட்டாகுளத்தில் தார்சாலை பணி கிருஷ்ணமுரளி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

செங்கோட்டை,மார்ச் 4: தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி கொட்டாகுளம் கிராமத்தில் ரூ.13 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை துவக்கியும், காசிதர்மம் ராஜீவ்நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தினையும் அதிமுக மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய செயலாளரும் அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவருமான டாக்டர் சுசீகரன், தமாக மாவட்ட தலைவர் அய்யாதுரை, பஞ்சாயத்து தலைவர் சுடலை மாடத்தி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திருமலைக்குமார், குமார், சுரேஷ் புன்னையாபுரம் முத்துபாண்டி, வழக்கறிஞர் அருண், மூக்கையா, கிளை செயலாளர் இசக்கிமுத்து, துரையப்பா, கலையரசன், திருமலைகுமார், சுப்பிரமணியன், இசக்கிராஜ், சின்ன இசக்கி, நல்லையா, ஒன்றிய பிரதிநிதி முத்து, பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேவமுருகன், செந்தில்குமார், காளிமுத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டர்.