Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம்

நெல்லை, மார்ச் 3: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 10ம் தேதிக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் துவங்கியுள்ளன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து நெல்லை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிக்கவும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கவும் தினம் ேதாறும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து அறிந்து கொள்ள வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் கலெக்டர் அலுவலக வாயிலின் தரை தளத்தில் வைக்கப்பட்டு வருவாய் துறை அலுவலர்கள் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் ஊழியர்கள் பதில் அளிக்கின்றனர்.