Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வாசுதேவநல்லூர் பூக்குழி திருவிழாவில் நீர் மோர் பந்தல்

சிவகிரி, மே 1: வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயில் பூக்குழி விழாவை ஒட்டி நீர் மோர் பந்தலை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார். வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குவது வழக்கம். இந்தாண்டு பூக்குழி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி வாசுதேவநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை சங்கரன்கோவில் எம்எல்ஏவும் வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளருமான ராஜா திறந்து வைத்தார். இதில் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், சங்கரன்கோயில் நகர்மன்ற தலைவர் கௌசல்யா வெங்கடேசன், பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சரவணன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் முனீஸ்வரன், பேராசிரியர் செல்லத்துரை, கணேஷ் கண்ணன், முத்துக்குமார், கவுன்சிலர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.