Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதை பொருளுடன் இருந்த அமைச்சரை பதவி நீக்கக் கோரி நெல்லையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நெல்லை, ஜூன் 30: போதை மருந்து பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கக் கோரி நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட திமுக செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வஹாப் எம்எல்ஏ, கிரகாம்பெல் உள்ளிட்ட திமுக மாணவரணியினர் 200பேர் கைது செய்யப்பட்டனர். போதை மருந்து பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மாணவரணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக மாணவரணி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில தலைவர் டிபிஎம் மைதீன்கான், முன்னாள் எம்பிக்கள் ஞானதிரவியம், விஜிலா சத்யானந்த், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் மத்தி சுந்தர், மேற்கு முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் கேஆர் ராஜூ, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மாலைராஜா, மாநில நெசவாளரணி செயலாளர் பெருமாள், முன்னாள் மேயர் பி.எம்.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் கிரிஜாகுமார், மாநகர துணை செயலாளர் பிரபு, தொமுச பேரவை தலைவர் தர்மன், மாநில விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கிழக்கு மாநகர பொறுப்பாளர் வக்கீல் தினேஷ், மாவட்ட அவைத்தலைவர் முருகன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ெசல்வசூடாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், ஒன்றிய திமுக செயலாளர்கள் போர்வெல் கணேசன், வேலன்குளம் கண்ணன், சுபாஷ் தங்கபாண்டியன், செல்வ கருணாநிதி, ஜோசப்பெல்சி, அருள்மணி, அன்பழகன், மாரியப்பன்,

பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், துபை சாகுல், வக்கீல் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், இளைஞரணி அமைப்பாளர்கள் வில்சன் மணித்துரை, கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கருப்பசாமி செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், சத்தியவாணிமுத்து, மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், நித்யபாலையா, அலிஷேக்மன்சூர், ரம்சான்அலி, மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் நவ்ஷாத், விவசாய அணி சுடலைக்கண்ணு, பல்லிக்கோட்டை செல்லத்துரை, எல்ஐசி பேச்சிமுத்்து, கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், கீழநத்தம் ஊராட்சி தலைவருமான அனுராதா ரவிமுருகன், இன்ஜினியர் பலராமன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரி, மாநகர அமைப்பாளர் மேரி,

மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, தேவிகா, மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் காமினிதேவன், மீனவரணி அமைப்பாளர் அருள் இளங்கோ, வக்கீல்கள் அருள்மாணிக்கம், சுரேஷ்குமார், மணிகண்டன், அன்னராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான், வார்டு செயலாளர்கள் மாரிமுத்து, பேபிகோபால், அந்தோணி, ஜெயின்உசேன், காஜா முகைதீன் மற்றும் பாலகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டி, ஆலடி எழில்வாணன், மாநில பேச்சாளர்கள் சிபா ராவணன், நெல்லை முத்தையா, குண்டுபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

திமுக போராட்டத்தை யொட்டி நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.