Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திசையன்விளையில் பிரசித்திபெற்ற சுடலை ஆண்டவர் கோயில் கொடைவிழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்: பெண்கள், சிறுமிகள் திரளாக பங்கேற்பு

திசையன்விளை,ஆக.29: நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள், சிறுமிகள் என திரளானோர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திசையன்விளை வடக்குத்தெரு  சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழா கடந்த ஆக.23ம் தேதி துவங்கி நேற்று வரை தொடர்ந்து 6 நாட்கள் விமரிசையாக நடந்தது. திருவிழா நாட்களுக்கு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 6ம் நாளான நேற்று காலை அன்னபூஜையும், காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. காலை  மன்னராஜா கோயிலில் இருந்து தாரை தப்பட்டை, கொம்பு வாத்தியம் முழங்க மேளத்தாளத்துடன் முத்துக்குடை பவனி வர சிறுமியர் மற்றும் பெண்களின் மஞ்சள் பெட்டி பவனியும், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் மஞ்சள் நீராடல் நடந்தது.

மதியம் வழிபாடும் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் சமயசொற்பொழிவும், மாலை 2025-26ம் ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை வென்ற திசையன்விளை அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கும் கோயில் நிர்வாகியும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சேம்பர் செல்வராஜ், சன் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ்.குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுடலை ஆண்டவர் சிலம்பாட்டம் குழுவினரின் சிலம்பாட்டம், குட்டீஸ் பேஷன் ஷோ மற்றும் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அலங்கார பூஜை நடந்தது. பெருங்கொடை விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள் செய்தனர்.