நெல்லை, ஆக.26: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத்தலைவர் முருகன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், ஏஐசிசிடியு பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுடலைராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் சைலஸ் அருள்ராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை சிஐடியூ நிர்வாகி மோகன் துவக்கிவைத்து பேசினார். இதில் ஏஐகேஎம் மாநில நிர்வாகி கருப்பசாமி, ஆர்ஒய்ஏ நிர்வாகி சுந்தர்ராஜ், ஏஐஏஆர்எல்ஏ நிர்வாகி முடிராஜ், ஏஐபிடபிள்யூஏ நிர்வாகி அன்புச்செல்வி மற்றும் சமூக முன்னணி உறுப்பினர்கள் முருகன், முத்துகிருஷ்ணன், சதியாஸ், கலைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஏஐடியுசி சார்பில் சேதுராமலிங்கம், ஏஐசிசிடியு சார்பில் சங்கர பாண்டியன் ஆகியோர் பேசினர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.



