தியாகராஜநகர், ஆக. 26: கன்னியாகுமரி கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பாளை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் அறிவியல் வினாடிவினா, புதிய கண்டுபிடிப்புகள், நடனம், திறனறிவு பிரிவிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், ரொக்க பரிசாக ரூ. 10,000 வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்கள் மரிய ஆல்பர்ட் டெனிசன், விஜயகுமார், ஜேம்ஸ் ஜெயராஜ், அந்தோணி, வினோத், ஷாஜி மற்றும் முருகன் ஆகியோரை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி, உதவி தலைமையாசிரியர் ஞானராஜ், பாராட்டினர்.



