Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கைவிரல் ரேகை பதிவு செய்ய ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்

நெல்லை, ஆக. 28: நெல்லை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (29ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது என கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் சிலர் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் இருந்தால், கைவிரல் ரேகையினை ரேஷன் கடை விற்பனையாளரை அணுகி விற்பனை முனைய இயந்திரம் மூலம் கைவிரல்ரேகை பதிவு செய்யவேண்டும்.

மேலும், வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டை விபரங்களை சமர்ப்பித்து கைரேகை பதிவினை பதிவேற்றலாம். 5 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோர்கள், முதியோர்கள், கைரேகை விழாதவர்கள் ஆகியோர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம், பிடிஓ அலுவலகம் மற்றும் ஆதார் மையங்களில் தங்களது ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை மற்றும் கண்விழிப்பதிவு(IRIS) பதிவை புதுப்பித்த பின்னர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் கைவிரல்ரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும்.

இறந்த குடும்ப அட்டை உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன், ஆதார் அட்டையின் நகலை ரேஷன் கடை விற்பனையாளரிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.