Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் பணியிட மாற்றம்

நெல்லை, ஜூன் 25:நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் இருவரின் பணிகளை மாற்றி அமைத்து பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு நிர்வாக நலன் கருதி சுகாதார அலுவலர்களுக்கான பணிகளை மாற்றியமைத்து பணியிட மாறுதல் செய்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தச்சநல்லூர் மண்டலம் மற்றும் மைய அலுவலக பிறப்பு, இறப்பு திருத்தம், பதிவின்மை சான்று குறித்த பணிகள் சுகாதார அலுவலர் முருகன் தச்சநல்லூர் மண்டலத்தை மட்டும் கவனிப்பார்.

மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலராக இருந்த சாகுல் ஹமீது மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் பணியுடன் மைய அலுவலக பிறப்பு - இறப்பு திருத்தம், பதிவின்மை சான்று குறித்த பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை கவனிப்பார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.