Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அர்ச்சகர் வீட்டில் 11 பவுன் கொள்ளை: 2 பேரை பிடித்து விசாரணை

நெல்லை, அக். 23: நெல்லை டவுன் ரதவீதி அருகே உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (58). இவர், டவுனில் உள்ள வாகையடி அம்மன் கோயிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதியன்று இரவு கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதால், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் பaணம் ஆகும்.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நெல்லை டவுன் பாரதியார் தெருவிலும் கொள்ளையர்கள் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது தொடர்பாக டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு நடத்திய போது இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கண்களை தவிர முகத்தை துண்டால் கட்டியிருந்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் பாளையை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கின்றனர்.