Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெல்லை மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆணையாளர் ஆய்வு

நெல்லை,அக்.23: வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டியதை தொடர்ந்து நெல்லை மாநகர பகுதிகளில் மழைநீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று காலை 11வது வார்டு வண்ணார்பேட்டை பாலாஜி நகர் மற்றும் அடுக்கு மாடிகுடியிருப்பு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாளை 39வார்டு சிவந்திப்பட்டி மெயின்ரோடு சுற்றி உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்து மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதிகாரிகளும் நடவடிக்கையில் இறங்கினர்.

தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நெல்ைல, பாளை தச்சை ,ேமலப்பாளையம் உள்பட நான்கு மண்டலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று தூய்மை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். மேலும் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே மழைநீர் வடிகால் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தூர்வாரப்பட்டு தண்ணீர் தடையின்றி செல்லநடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல்லை டவுன் பகுதியில் உள்ள கோடகன் கால்வாய் மழைநீர் வழித்தடமான நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் சாலை, நெல்லை கண்ணன்சாலை, குறுக்குத்துறை ரயில்வே கேட், மீனாட்சிபுரம் அக்ரகாரம் பின்புறம் வழியாக அண்ணாநகர் சுடலை கோயில் அருகே உள்ள ஓடை வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இந்த மழைநீர் வடிகால் ஓடைகளில் பலஇடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கண்டறிந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அடைப்புகள் சரிசெய்யப்பட்டு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தியாகராஜ நகர் மேம்பாலம் கீழ்பகுதி மெகா பள்ளத்தில் தேங்கிய மழைநீர்

தியாகராஜநகர்: பாளையங்கோட்டை தியாகராஜநகர், மகாராஜா நகர் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பகுதியில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இதில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழையால் நீர் தேங்கியது. இதனால் பள்ளத்தின் விபரீதம் தெரியாமல் வந்த வாகன ஓட்டிகள் மழை நீருக்குள் புகுந்து தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. எனவே இந்தப் பகுதியில் தோன்றியுள்ள பள்ளத்தை நிரப்பி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.