Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊதியம் வழங்காததை கண்டித்து சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவில், மே 23: ஊதியம் வழங்காததை கண்டித்து சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் யூனியனுக்குட்பட்ட கரிவலம் வந்தநல்லூர் பஞ்சாயத்தில் 23 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஊதியம் இதுநாள் வரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளியப்பன் தலைமையில் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.