Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

நெல்லை, ஜூன் 19: தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு டிடிடிஏ தொடக்கப்பள்ளி மற்றும் குசவன் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு களக்காடு வழக்கறிஞர் அரிஸ்டா மோசஸ் எப்சி ஏற்பாட்டில் நோட்டு, புத்தகம், விளையாட்டு டீ சர்ட் போன்றவை நலத்திட்ட உதவிகளை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் களக்காடு ஒன்றிய செயலாளர் விக்னேஷ்ராஜ், நகர செயலாளர் முத்துராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பரப்பாடி ஜெயபால், களக்காடு நகர மகளிர் அணி அமைப்பாளர் ரதிதேவி, களக்காடு நகராட்சி கவுன்சிலர் மீகா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பவுல், நல்லாசிரியர் செல்வராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொருளாளர் பூலோக பாண்டியன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏசுதாசன், பவுல் செல்வி மற்றும் தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.