Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வகுப்பு மாணவியிடம் ஆபாச சைகை காட்டிய மர்ம நபர்

நெல்லை, ஜூன் 19: பாளையங்ேகாட்டையை சேர்ந்த 14 வயதுள்ள 10ம் வகுப்பு மாணவி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் பள்ளி மாணவியை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடங்களிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு நடத்தி அவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.