Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாளை மண்டலம், கீழநத்தம் ஊராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கேடிசி நகர், ஆக.15:பாளை மண்டலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மண்டல தலைவர் பிரான்சிஸ் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் புரந்திரதாஸ், கவுன்சிலர்கள் முத்துசுப்பிரமணியன், பேச்சியம்மாள், உதவி செயற்பொறியாளர்கள் பைஜூ, தங்கபாண்டியன், உதவி வருவாய் ஆய்வாளர் வடிவேல்முருகன், உதவிப் பொறியாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், சஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கீழநத்தம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்கும் மேலூர் மற்றும் கேடிசி நகர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவிமுருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் அந்தோணி பிச்சை, வார்டு உறுப்பினர்கள் பலவேசம், இசக்கிபாண்டி, லதா பிச்சையா, நூலகர் பழனி, மக்கள் நலப் பணியாளர் மாரியம்மாள், ஊக்குநர் மல்லிகா, கேடிசி நகர் வடபகுதி நலச்சங்கத் தலைவர் கல்லத்தியான், செயலாளர் ஜோதிமணி, மாணிக்கம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பவர் முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.