Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெல்லை அருகே தாழையூத்தில் வாகன ஜாக்கிகள் திருடியவர் கைது

நெல்லை, ஆக. 18: நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் மொபைல் பஞ்சர் கடையில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள வாகனங்களுக்கான ஜாக்கிகளை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகேயுள்ள தாழையூத்து சங்கர்நகரைச் சேர்ந்த கணேசனின் மகன் தம்புராஜ் (31). தாழையூத்தில் உள்ள ஒரு ரைஸ் மில் அருகே பஞ்சர் கடை நடத்தி வரும் இவர், நடமாடும் பஞ்சர் கடையும் வைத்துள்ளார். இதனிடையே கடந்த மே 16ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு தனது வண்டியை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். அந்த வண்டியில் சுமார் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 3 ஜாக்கிகள் மற்றும் பஞ்சர் சாமான்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மறுநாள் (17ம் தேதி) காலை வண்டியை திறந்துபார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ஜாக்கிகளை காணவில்லை. பின்னர் இவற்றை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்ததும் பதறினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்புராஜின் உறவினர் ஒருவர் மேல தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு வல்கனைசிங் கடையில் திருடுபோன ஜாக்கிகள் இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து அக்கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது, கதிரவன் நகரைச் சேர்ந்த கணபதியின் மகன் செல்வகுமார் (47) என்பவர் அந்த ஜாக்கிகளை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தெரியவந்த தாழையூத்து போலீசார் செல்வக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.