நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டதில் அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இரவில் கண்சிமிட்ட மறந்த கலர்புல் மின்விளக்குகள்
நெல்லை,ஆக.18: நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலர்புல் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளதாகவும் நடந்த முடிந்த சுதந்திர தினவிழாவுக்குகூட ஒளிராமல் இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லை மாநகர பகுதி வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வடக்கு - தெற்காக கடந்த 2009ம் ஆண்டு 13.6 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோல் ஒன்றிய அரசு நிதி மூலம் நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையம் ,நேரு சிறுவர் கலையரங்கம், வஉசி விளையாட்டு அரங்கம், பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம் உள்ளிட்டவைகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில் நெல்லையின் முக்கியச் சாலையான சுவாமி நெல்லையப்பர் நெஞ்சாலையில் பாரம்பரிய அலங்கார தூண்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்கு தூண்களில் மூவர்ண கொடி கலரில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுபோல் நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ேமம்பாலத்தையும் வெள்ளையடித்து அழகுபடுத்தப்பட்டது.


