Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திசையன்விளை வங்கி ஏடிஎம்மில் ரூ.500 கள்ள நோட்டுகள் டெபாசிட்

திசையன்விளை, ஜூலை 18: திசையன்விளையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் உள்ள டெபாசிட் இயந்திரத்தின் மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 9 எண்ணம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் வங்கி மேலாளர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அற்புத விநாயகர் கோவில் சந்திப்பு, நவ்வலடி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏடிஎம் அறையின் மெஷினில் உள்ள வங்கிக்கணக்கை சரிபார்த்த போது பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் ‘500 ரூபாய் கள்ளநோட்டுகள் 9 எண்ணம்’ இருப்பது கண்டு மேனேஜர் அதிர்ச்சி அடைந்தார். ஏடிஎம் அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் காணத்தக்க நபர் ஒருவர் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளுடன் திசையன்விளை போலீசில் புகார் அளிAத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுகள் செலுத்தப்பட்ட சம்பவம் திசையன்விளை பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.